புதிய ஒப்பந்தம்.... 2000 பேருக்கு வேலைவாய்ப்பு?!!

புதிய ஒப்பந்தம்.... 2000 பேருக்கு வேலைவாய்ப்பு?!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசிற்கும் ரெனால்டு நிஸ்ஸான் நிறுவனத்திற்கும் இடையே 3300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.

ஒப்பந்தம்:

முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற அடிப்படையில்,தெற்கு ஆசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தமிழக அரசுக்கும் ரெனால்டு நிஸ்ஸான் நிறுவனத்திற்குமான 3300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி நகர் தனியார் விடுதியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் தொழில்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

விரிவாக்கத்திற்காக:

ஒரகடத்தில் இயங்கி வரும் ரெனால்டு நிஸ்ஸான் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது மூலம் 2000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனம்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கத்திற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டு 2025ம் ஆண்டில் தனது மின்சார வாகனத்தை ரெனால்டு நிஸ்ஸான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  ”ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலுக்கு மாற்றி விடுவேன்....” அமைச்சர் சேகர் எச்சரிக்கை!! பின்னணி என்ன?!!

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com