ஆகஸ்ட் 23 ஆம் நாள் தேசிய விண்வெளி நாளாக அறிவிப்பு!

ஆகஸ்ட் 23 ஆம் நாள் தேசிய விண்வெளி நாளாக அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

நிலவில் சந்திரயான் மூன்றின் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என்றும், ஆகஸ்ட் 23 ஆம் நாள் தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி  அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் சந்திராயன் மூன்று திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் சந்திரயான் விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், சந்திரயான் மூன்று திட்ட நாயகர்களுக்கும் அவர்களது முயற்சிகளுக்கும் வணக்கம் செலுத்துவதாக கூறினார். பல்வேறு விதமான மகிழ்ச்சியில் திகைப்பதாகக் கூறினார். தென்னாப்பிரிக்காவில்  இருந்த போது பொறுமையிழந்து காணப்பட்டதாகவும், தனது எண்ணங்கள் உங்களுடன் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆகஸ்ட் 23 ஆம் தேதி தன் கண் முன் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருப்பதாக கூறினார். 
 
சந்திரயான் 2 இறங்கிய இடத்திற்கு திரங்கா முனை என்று பெயரிட்ட பிரதமர், இது எந்த தோல்வியும் முடிவல்ல என்பதை நினைவுபடுத்தும் என்று கூறினார். சந்திரயான் மூன்றின் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என்று பெயரிட்டார். சிவசக்தி என்ற பெயர் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளம் என்று கூறிய சக்தி என்ற வார்த்தை பெண்களுக்கு அதிகாரமளித்தலைக் குறிப்பதாகவும் கூறினார். 

இனி வரும் ஆண்டுகளில் ஆகஸ்ட் 23 ஆம் நாள் தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார். சந்திரயான் மூன்று திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறிய பிரதமர், இந்த வெற்றி எதிர்வரும் தலைமுறையினர் அறிவியலை மக்கள் நன்மைக்காக பயன்படுத்த ஊக்கமாக அமையும் என்றும் கூறினார். மக்கள் நலனே உச்சபட்ச அர்ப்பணிப்பு என்றும் தெரிவித்தார். 

சந்திரயான் மூன்று திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறிய பிரதமர், இந்த வெற்றி எதிர்வரும் தலைமுறையினர் அறிவியலை மக்கள் நன்மைக்காக பயன்படுத்த ஊக்கமாக அமையும் என்றும் கூறினார். மக்கள் நலனே உச்சபட்ச அர்ப்பணிப்பு என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து இஸ்ரோவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது இஸ்ரோ தலைவர் சோம்நாத், விக்ரன் லேண்டரிலிருந்து பிரக்ஞான் ரோவர் நிலவில் தடம் பதிக்கும் படத்தை வழங்கினார். இதேபோல், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விக்ரம் லேண்டரின் மாதிரியை வழங்கினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com