”2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முடிவு” பிரதமர் மோடி!

”2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முடிவு” பிரதமர் மோடி!
Published on
Updated on
1 min read

2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முடிவெடுத்துள்ளதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் உடனான செய்தியாளர் சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் பயணமாக கிரீஸ் நாட்டின் ஏதன்ஸ் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க மலர்கிரீடம், மாலை அணிவித்து இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து கிரீஸ் குடியரசுத்தலைவர் கேத்ரினா சகேலாரோ பவ்லோவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது சந்திரயான் 3 வெற்றி என்பது மனித சமூகத்திற்கே கிடைத்த வெற்றி என மோடி பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு "Grand Cross of the Order of Honour" என்ற கவுரவத்தை கேத்ரினா வழங்கினார்.

உலகளவில் கிரீஸ் அந்தஸ்த்தை உயர்த்த பங்காற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் உடனும், இருநாட்டுப் பிரதிநிதிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை, இணையப்பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, விவசாயம், கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முடிவெடுத்துள்ளதாகவும், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண இருநாடுகளும் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com