தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஆதரவு...ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஆதரவு...ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
Published on
Updated on
1 min read

டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பினரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அவர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, ஜனவரியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, மே 27 ஆம் தேதி ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். 

அதனை தொடர்ந்து இன்று டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவா் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவா் கசுயா நகஜோ ஆகிய இருவரையும் தமிழ் நாட்டு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், தமிழ் நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சா் டி.ஆர்.பி ராஜா, தொழில்துறை தலைமைச் செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com