ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிய  கேமராக்கள்..!  குறுஞ்செயதி மூலம் எச்சரிக்கை ...! 

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிய  கேமராக்கள்..!  குறுஞ்செயதி மூலம் எச்சரிக்கை ...! 
Published on
Updated on
2 min read

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை அந்த நாடு அரசு கண்டித்து வருகிறது. பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானில் போராட்டம் வெடித்தது. சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி 22 வயதான மாசா அமினி எனும் பெண் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே உயிரிழந்தார். இதனால் ஈரானில் பெரும் கலவரம் உருவானது. பல இடங்க்களில் போராட்டங்களும் வெடித்தன. இரானில் சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிவது கட்டாயம் என சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக பட்டது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க " கார்ஸ் எர்ஷாத்" என்ற சிறப்பு பிரிவு போலீசார் குழுவானது அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதியன்று இரானில் குர்ஷிஷ்தான் மாகாணம் சகீஷ் நகரைச் சேர்ந்த மாஷா ஆமினி என்ற பெண் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது சிறப்பு படை போலீசார் மாஷாவை வழிமறித்து அவர் உரையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டினர். அதையடுத்து அவரைக் கைது செய்து வானில் அழைத்துச்சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக்கொடூரமாகத் தாக்கப்பட்டார்.அதற்குள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 16-ஆம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட மாஷாவின் மரணம் ஈரானில் பல போராட்டங்கள்போராட்டங்கள் முன்னெடுக்கக் காரணமாகியது. அங்கு லட்சக்கணக்கான பெண்கள் இந்த கட்டாய சட்டத்தை எதிர்த்து துணிச்சல் மிகு போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தில் எண்ணற்ற உயிர்கள் பலியாகின. போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பலரும் குரல் கொடுத்தனர். அந்த வகையில் ஹிஜாப் தொடர்பான அடக்குமுறை  சட்டங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்  ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்  துருக்கி பாடகி  'மெலக் மோஷோ' மேடை நிகழ்ச்சியின் போது தனது முடியை வெட்டிக்கொண்டார். பல பெண்களும் தங்களின் ஹிஜாபை எரித்தும் தலை முடியை வெட்டியும் எதிர்ப்பு அந்நாட்டு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல மாதங்கள் கடந்தும்  இந்த போராட்டத்தின் தாக்கங்கள் இன்னும் ஓயாத நிலையில் தற்போது  ஈரான் அரசு அந்நாட்டு பெண்கள் உடை அணியும்  விதத்தை, குறிப்பாக ஹிஜாப் அணியும் விதத்தைக் கண்காணிக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி இருக்கிறது. சரியாக ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிந்து அவரவர்களின் கைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கத்  திட்டமிட்டுள்ளது. பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்தும் நாகரிக வளர்ச்சி குறித்தும் பல புரட்சிகள் எழுந்தும் இன்னும் ஈரானில் பெண்களின் ஆடை குறித்து இதுமாதிரியான கடுமையான சட்டங்கள் இருப்பது மனித வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி என்றே கருதலாம்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com