மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் உழியர்கள் விமானத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்காக சென்ற நிலையில் கழிவறையின் குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து ஆராய்ந்த போது அந்த குழந்தையை கழிவறையில் பெற்றெடுத்து விட்டு அங்கேயே விட்டு சென்றிருக்க வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகிகப்பட்டு வந்தனர்.இதையடுத்து மடகாஸ்கர் என்ற நாட்டை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரிஷியஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் மடகாஸ்கர் நாட்டில் இருந்து சர் சிவசாகர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.விமானம் தரை இறங்கிய பின் வழக்கமான சுங்க சோதனைகளின் போது அந்த விமானத்தின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தை இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் பின்னர் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.குழந்தையை குப்பைத்தொட்டியில் விட்டு சென்றதாக ஒரு பெண் மீது சந்தேகங்கள் எழுந்த நிலையில் அந்த பெண் ஆனவர் குழந்தைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதில் உருதியாக நின்றதாக சொல்லப்படுகிறது.
இவர் கூறுவதில் நம்பிக்கை இல்லாத அதிகாரிகள் மருத்துவரிடம் அந்த பெண்ணை பரிசோதித்து பார்க்குமாறு கூறியுள்ளனர்.மருத்துவர்களும் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டனர்.இவரின் பரிசோதனைக்கான முடிவுகளில் அந்த பெண் மிகச் சமீபத்தில் குழந்தையை பிரசவித்துள்ளார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.தற்போது குழந்தையினை பராமரிக்கப்பட்டு வரும் அதே மருத்துவமனையில் அந்த பெண்ணையும் வைத்து போலீசார் கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.
இதில் குழந்தையும் தாயும் நலமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.மொரிஷியசில் இரண்டு ஆண்டு காலம் தங்கி வேலை பார்ப்பதற்காக வந்த மடகாஸ்கர் பெண் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளிவந்த பின் அவரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புதிதாகப் பிறக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை கழிவறையில் விட்டு சென்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்குபதிவுகள் செய்யப்படும் என மொரிஷியஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.