”4,000 சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது இங்கேதான்” - பிரதமர் மோடி

Published on
Updated on
1 min read

புதிய வளர்ச்சிப்பாதையை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று முதல் புதிய நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டு 700க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து சென்டர் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டு மூவர்ணக்கொடி, தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டதும், 4 ஆயிரம் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதும் இங்கேதான் எனவும் அவர் நினைவு கூர்ந்தார்.

மாற்றுபாலினத்தவர்களுக்கான சட்டங்கள் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டதோடு, 370 சிறப்புப் பிரிவு நீக்கம் காரணமாக காஷ்மீர் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டதாகவும் கூறினார். தற்சார்பு இந்தியா திட்டம் உலக நாடுகளை ஈர்த்துள்ளது எனவும், முத்தலாக் தடையால் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி கிடைத்ததாகவும் கூறினார். உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாட்டை மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com