அமெரிக்கா போல பேப்பர் காட்டினால் தான் இனி இங்கும் கடை வைக்க முடியும்...

தெருவோரம் உள்ள கடைகளுக்கு இனி அனுமதி மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா போல பேப்பர் காட்டினால் தான் இனி இங்கும் கடை வைக்க முடியும்...

சென்னை மாநகராட்சியின் அக்டோபர் மாத மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் அனுமதி ஆகியவை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது 152 வது வார்டு கவுன்சிலரான திமுவை சேர்ந்த பாரதி பேசுகையில், "சென்னை மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை மாமன்ற உறுப்பினர்களிடம் வழங்கினால் மாமன்ற உறுப்பினர்களுக்கு வசதியாக இருக்கும்", என்றார்.

மேலும் படிக்க | பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் பயிற்சி முகாம்...! தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

மேலும் பேசிய அவர், , மண்டலக்குழு தலைவரான நொளம்பூர் ராஜன் பேசுகையில், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அனுமதி வழங்கும் குழுவில் யார் யாரெல்லாம் உள்ளனர் என்றும், கடந்த 2017-ல் மாமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகள் மட்டும் இடம் பெற்றிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, “தற்போது தேர்தல் நடைபெற்று மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்", என்றார்.

அப்போது இடையே பேசிய மாகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், "நடைபாதைகளில் பாதசாரிகளின் சிரமத்தை போக்க நடைமேடைகளில் நோ பார்க்கிங் என போர்டு வைப்பது போல, தெருவோர கடைகள் வைக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்", என்றார்.

மேலும் படிக்க | பாஜகவும் டிஆர்எஸ்ஸும் கூட்டணியா?? மக்கள் முன் அரசியல் நாடகம் செய்கின்றனரா?!! ராகுல் காந்தியின் விளக்கம்..!!!