மணிப்பூா் விவகாரம்: வேகமாகப் பரவும் வதந்திகள்... அதிகாரிகள் எச்சரிக்கை!

மணிப்பூா் விவகாரம்: வேகமாகப் பரவும் வதந்திகள்... அதிகாரிகள் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை தொடா்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள் மணிப்பூரில் அரங்கேறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிலையில், வன்முறை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக நெகிழியால் சுற்றப்பட்ட பெண் சடலம் ஒன்றின் புகைப்படம், பழங்குடியின பெண் என்று போலியாக அடையாளப்படுத்தப்பட்டு அண்மையில் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால், அந்தப் படம் டெல்லியில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மணிப்பூரில் கலவரம் குறித்து பல போலித் தகவல்கள் இணையத்தில் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இரு சமூகத்தினர் இடையே பகைமையை வளர்க்கும் சதிச்செயல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், தகவல்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com