புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சந்தில் பாலாஜிக்கு, சிறப்பு வசதிகள் செய்து சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக, மாய தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக, அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் வைத்து அமைச்சர் ரகுபதி பேசியபோது, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எந்தவிதமான சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்றும், செந்தில் பாலாஜிக்கு இடையூரு செய்ய வேண்டும் என்பதற்காக சிறையில் அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவது போல் மாய தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும், குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
மேலும், மேகதாது விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.