நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, எதிர் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதில் மணிப்பூர் கலவரம், டெல்லி பொதுசிவில் சட்டம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடர் எந்தவித பிரச்னையுமின்றி சுமூகமாக முடிய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நேற்று அனைத்துக்கட்சி இந்தக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத் தொடரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வு காணவும் அரசு தயாராக இருக்கும் என்ற உறுதி அரசு தரப்பில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மூத்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, பல கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றுள்ளார் என்பதால், இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.
இதையும் படிக்க || "வரும் 2024-ல் புதிய இந்தியா உருவாகும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!