சைக்கிளே இல்லாத மாநிலத்தில் விமானம்..! ராகுலை விமர்சித்த மோடி..!

சைக்கிளே இல்லாத மாநிலத்தில் விமானம்..! ராகுலை விமர்சித்த மோடி..!

ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்காக தான் பாரத் ஜடோ யாத்திரை நடத்துகின்றனர் என பிரதமர் மோடி விமர்சனம்.

குஜராத் தேர்தல்:

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது நாளாக நேற்று பிரசாரம் செய்தார். அதன்படி, வல்சாத் மாவட்டத்தின் சுரேந்திர நகரில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய பிரதமர், காங்கிரஸ் சாத்தியமில்லை என்று கூறிய பல நலத்திட்டங்களைத் தான் குஜராத்தில் நிறைவேற்றியதாக கூறியவர், குஜராத்தின் கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் செய்ததையும் அப்போது குறிப்பிட்டுள்ளார்.

Gujarat Elections 2022: 'I had promised 24 hours electricity, I fulfilled  promises', says PM Modi - The Economic Times Video | ET Now

சைக்கிளே இல்லாத மாநிலத்தில் விமானம்:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் ஒரு சைக்கிள் கூட தயாரிக்கப்படாத நிலையில், தற்போது விமானத்தையே தயாரிக்கக் கூடிய அளவுக்கு குஜராத் வளர்ந்துள்ளதற்கு பாஜகவே காரணம் எனக் கூறிய பிர்தமர் மோடி, குஜராத் என்றால் வளர்ச்சி என்று கூறிய பிரதமர், மாநிலம் முழுவதும் தற்போது நான்காயிரம் கல்லூரிகளும் 600 தொழிற்பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக கூறினார்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்றத்தில் பரபர..! எடப்பாடிக்கு நோ சொன்ன நீதிபதிகள், ஓங்கிய ஓபிஎஸ்ஸின் கை..!

Gujarat Election 2022: गुजरातमधील प्रचारसभेत राहुल गांधींचे भाषण एका  व्यक्तीने अचानक रोखले, त्यानंतर घडले असे काही... - Marathi News | Gujarat  Election 2022: Rahul Gandhi's ...

ஆட்சிக்கு வரவே பாதையாத்திரை:

தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுவதேயில்லை என்று தெரிவித்த மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவே யாத்திரை நடத்துவதாக பாரத் ஜடோ யாத்திரையை பிரதமர் விமர்சனம் செய்த மோடி, ஜம்புசார் மற்றும் நவ்சாரி ஆகிய இடங்களிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.