கலைஞரின் பேனா நினைவு சின்னம்...! சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி...!!

கலைஞரின் பேனா நினைவு சின்னம்...! சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி...!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா  சின்னம் அமைப்பதற்கு, மத்திய சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில் ரூபாய் 81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு  பல்வேறு  தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  தமிழ்நாடு அரசு சார்பில் நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒப்புதல் தரக் கோரி மத்திய சுற்றுச் சூழல் மதிப்பீட்டு குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுற்றுசூழல் நிபுணர் குழு, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட  15 நிபந்தனைகளுடன் நினைவு சின்னம் அமைக்க  சுற்றுச் சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் -சிறப்பு பார்வை...!!