"செந்தில் பாலாஜி நலமுடன் மீண்டு வந்து,  திமுகவை மாட்டிவிட வேண்டும்":  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

"செந்தில் பாலாஜி நலமுடன் மீண்டு வந்து,  திமுகவை மாட்டிவிட வேண்டும்":  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
Published on
Updated on
1 min read

அமலாக்கத்துறை விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் திமுகவின் முக்கிய நபர்கள் சிறை செல்ல நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

திருவள்ளூர் அருகே நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் எதிர்ப்புகள் உள்ள பகுதியிலும் மற்றும் வருவாய் குறைவாக வரும் டாஸ்மார்க் கடைகள் மட்டுமே தமிழகத்தில் தற்போது மூடப்பட்டுள்ளது, என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் அமைச்சர்களுக்கு இலாகாக்களை கவனித்துக் கொள்வதற்கு தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மக்கள் பணியும் இல்லாமல் ஒரு இலாகாவும் இல்லாமல் ஹாஸ்பிடலில் படுத்துக் கொண்டுள்ள ஒருவருக்கு அமைச்சராக பதவி கொடுத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது எதற்கு இதுதான் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி? எனவும் பேசியுள்ளார்.

மேலும், உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான், என்பதைப் போல செந்தில் பாலாஜி, E.D.யிடம் வாயைத் திறந்தால் பல பேருக்கு தி.மு.க.வில் எமகண்டம் தான் எனக் கூறியுள்ளார். மேலும், எங்களைப் பொறுத்தவரை ஒரே கவலை மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜி நலமாக இருக்க வேண்டும், நலமாக இருந்து இ.டி விசாரணையில் உண்மையை சொல்லி அனைவரையும் மாட்டி விட வேண்டும். இதை தான் நாங்கள், அ.தி.மு.க காரர்கள் விரும்புகிறோம், எனவும் பேசியுள்ளர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com