யப்பா!! இது சுதந்திர தினம் இல்லையாம், குடியரசு தினமாம் பா!!!- அமைச்சர் துரைமுருகன்!!!

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், தவறுதலாக குடியரசு தினம் என்று கூறி, அனைவரையும் பதற வைத்துள்ளார்.

யப்பா!! இது சுதந்திர தினம் இல்லையாம், குடியரசு தினமாம் பா!!!- அமைச்சர் துரைமுருகன்!!!

நேற்று, இந்தியா முழுவதும் 76வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல தேசிய நினைவு சின்னங்களும், முக்கிய கட்டிடங்களும் மூவர்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டு, அழகாக இருளில் ஜொலித்தன. தமிழ்நாட்டிலும், பல இடங்களில், பல முக்கிய பிரமுகர்கள் ஆங்காங்கே விழா நடத்தி, அப்பகுதியில் சிலரை அவர்களது செய்ல்களைக் கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

வேலூரில் சுதந்திர விழா!

இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் சிறப்பாக சேவை செய்த ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றியதலைவர்கள் ஆகியோரைத் தேர்வு செய்து பரிசளிக்கும் விழா நடைப்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறந்த ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சான்றிதழுடன் பரிசளித்து கௌரவித்தார்.

உங்கல் கையில் தான் இருக்கிறது!

இந்த விழாவில் பேசிய போது, “மாவட்ட அளவில் இது போன்ற ஊராட்சித்தலைவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் சேவையை மேம்படுத்தவும், விருதுகளை வழங்கி கௌரவித்தது பாராட்டத்தக்கது.ஆட்சியை நிலைநிறுத்துவதோ மாற்றுவதோ பஞ்சாயத்து தலைவர்களின் கையில் தான் உள்ளது.” எனக் கூறினார்.

குடியரசு தினம்!

பின், திடீரென, இன்று சென்னையில் குடியரசு தினம் முன்னிட்டு எனத் தொடங்கி, அனைவரையும் பதற வைத்தார். ஏன் சுதந்திர தினத்தை குடியரசு தினம் என்று கூறுகிறார் என அனைவரையும் முழி பிதுங்க வைத்தார். ஆனால், அவர் கூற வந்தது என்னவென்றால், “இன்று சென்னையில் சுதந்திரம் தினம் முன்னிட்டு கவர்னர் மாளிகையில் டீ பார்ட்டி உள்ளது ஆனால் நான் கலந்துகொள்ளவில்லை” என்பது தான். ஆனால், அதற்கு பதிலாக ஏதேதோ சொல்லி, அனைவருக்கும் பதற்றமளித்துள்ளார்.

பொய் முகங்கள் கொண்டவர்கள் அவர்கள்:

அது மட்டுமின்றி, அங்குள்ளவர்கள் போலி பொய் முகங்கள் கொண்டவர்கள் என்றும், இங்கு (காட்பாடி) யில் உள்ளவர்கள் நிஜ முகங்கள் கொண்டவர்கள் என்றும், அதனால் தான் கவர்னர் இங்கே வந்ததாகவும் கூறி அனைவரையும் குழப்பி விட்டார். இது போதாதென்று, பத்திரிக்கையாளர்களிடமும் தனியாக பேசினார் அமைச்சர் துரைமுருகன். பத்திர்க்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரையில் திமுக அமைச்சர் மீது காலணி வீசியது பண்பாடில்லாதது என்று கூறினார்.

அதிமுக கொள்ளைக்காரர்கள்:

மேலும், அதிமுக குறித்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் பல வங்கிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது நாங்களும் அப்போதெல்லாம் சட்டமன்றத்தில் பேசிய போது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வளவு ஏன்? ஜெயலலிதாவின் கொடநாட்டிலேயே கொலை நடந்தது! அதை அவர் ஏன் கண்டுபிடிக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பும் விதமாக இருந்தது.

எங்களுக்கு தான் தெரியும் வலி!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமரை சந்தித்து பேசும் போது மேகதாது அணை குறித்து கூட பேசலாம். நீதிமன்றம் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை எடுக்க சொல்கிறார்கள். நாங்களோ, மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை எடுக்கிறோம் என்று சொல்கிறோம். ஆனால் நீதிமன்றத்தில் வீடுகட்டி கொடுக்க கூடாது என சொல்கிறார்கள். மக்கள் மத்தியில் சென்று நிற்கும் போது, எங்களுக்கு தான் அவர்களின் கஷ்டம் தெரியும்.” எனக் கூறினார்.

அதிமுக ஜெயிலுக்கு போக பதறுகிறது!!

மேலும், தற்போது நடந்து வரும் போதை பொருள் தடுப்பு பிரச்சாரங்கள் குறித்து பேசிய போது, “போதை பொருள் தடுப்பிற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அதிமுக பதறுகிறது. ஏன் என்றால், குட்கா பான்மசாலா வழக்கில் விரைவில் அதிமுகவினர் உள்ளே செல்ல போகிறார்கள் அதனால் அவர்கள் பதறுகிறார்கள் அவர்களுக்கு தான் இதில் மாட்டியவர்கள் யார், யார் உள்ளே செல்ல போகிறார்கள் என்பது தெரியும்” என்று கூறினார்.

ஆளுங்கட்சியில் இருக்கும் அமைச்சர் இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.