நெருங்கும் தீபாவளி...பட்டாசுக் கடைகளில் ஆய்வு!

நெருங்கும் தீபாவளி...பட்டாசுக் கடைகளில் ஆய்வு!
Published on
Updated on
1 min read

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் கோரி உரிமம் கோரும் பட்டாசு கடைகளை ஆய்வு மேற்கொண்டார் வட்டாட்சியர்.

வட்டாட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோரும் பட்டாசு கடைகளை கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி ஆய்வு மேற்க் கொண்டார். ஆய்வின்போது மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள அறிவுரைகள் தொகுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு எடுத்துரைத்தார். 

கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

மேலும் பட்டாசு கடைகளில் இருபுற வழிகள் தீயணைப்பு கருவிகள் மணல் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிகரெட், பீடி போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை உபயோகிக்க கூடாது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கடைகளுக்கு முன் வைக்க வேண்டும்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் ஆகியவை வெடி மருந்து சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பட்டாசு கடைகள் உரிமையாளரிடம் எடுத்துரைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com