நூதன முறையில் லாட்டரி விற்பனை... 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது!!

நூதன முறையில் லாட்டரி விற்பனை... 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது!!

Published on

கன்னியாகுமரி அருகே சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 6 பெண்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைபெறுவதால் கேரளாவை ஒட்டியுள்ள மாநிலமான தமிழ்நாட்டில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை  முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் லாட்டரியும் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகைகடைகள் அதிகம் நிறைந்த மீனாட்சிபுரம் பகுதியில், ஒரு கட்டிடத்திலன் மாடியில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தன் அடிப்படையில்  கோட்டார் போலீசார்  மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது அங்கு கட்டிடத்தின் மாடியில் ரகசிய அறைகளில் பெண்களை வைத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் கவுண்டர்கள் அமைத்து லாட்டரி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் லாட்டரி சீட்டு விற்ற தெரிசனங்கோப்பு அருகில் உள்ள ஞாலம் மேலத்தெருவைச் சேர்ந்த கிஷோர் (வயது 31), ஜோதி (32), அபினேஸ்வரி (19), அஞ்சு (22), கலைச்செல்வி (26), மேகலா (45), பெனிட்டா (29) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் ரொக்கப்பணம், விற்பனைக்காக வைத்திருந்த ரூ.11 ஆயிரத்து 40 மதிப்புள்ள 276 லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அந்த அறையில் நடந்த சோதனையில் 56,000 ரூபாய் பணம் மற்றும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டிடத்தை சுற்றிலும் 10 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு இதற்காக தனி ஊழியரும் பணியில் அமைக்கபட்டுள்ளார். வாசலில் சிவப்பு ,பச்சை விளக்குகள் பொருத்தபட்டிருந்தன பச்சை விளக்கு எரிந்தால் வாடிக்கையாளர்கள் வரலாம் எனவும் சிவப்பு விளக்கு எரிந்தால் திறக்கவில்லை மற்றும் பிரச்சனை எனவும் வாடிக்கையாளர்கள் வரகூடாது எனவும் அர்த்தம் ஆகும். இவ்வாறு பல்வேறு நூதன வழிகளை பின்பற்றி விற்பனை நடைபெற்று வந்துள்ளது.

இங்கிருந்துதான் அணைத்து இடங்களுக்கும் லாட்டரி சப்ளை அவதாகவும் கூறப்படுகிறது. பிடிபட்ட இளம் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் தினமும் 100 ரூபாய் பேட்டா எனவும் கூறியுள்ளார்கள்.

குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும்  மற்றும் காவல்நிலையம் அருகாமையில் இந்த லாட்டரி விற்பனை ரகசிய அறை இயங்கியதும் அதில் பெண்கள் மாட்டியதும் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com