கட்டுக்கட்டாக வலையில் சிக்கிய 2000ரூ நோட்டுகள்.. உத்துப் பார்த்தால் அதிர்ச்சி!!

கட்டுக்கட்டாக வலையில் சிக்கிய 2000ரூ நோட்டுகள்.. உத்துப் பார்த்தால் அதிர்ச்சி!!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே, மீனவர்கள் குளத்தில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுது, 2000ரூ நோட்டுக் கட்டுகள் வலையில் சிக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் வேம்பனூர் குளத்தில், மீன் பிடி தொழிலாளர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த  மீன் வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கியுள்ளன. இதனால் அனைவரும் பரபரப்பு பரபரப்பு ஆகியுள்ளனர். மேலும், 20 நோட்டுக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டுகட்டுகளில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா, என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் போல் இருந்தாலும், புதிய ரூபாய் நோட்டு கட்டுகளில் உள்ளது போல் வங்கி நூல் கட்டும் போடப்பட்டிருந்துள்ளது. இது குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து, ஏராளமான மக்கள் பார்வையிட வந்ததால், அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டுள்ளது.

உடனே ஆசாரிப்பள்ளம்  போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சினிமா சூட்டிங் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்பின்னர், சினிமா சூட்டிங் முடிந்த பிறகு, படக்குழுவினர் பணக்கட்டை வீசி எரிந்து சென்று இருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com