சிப்காட் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் நெற்றியில் நாமத்துடன் போராட்டம்!

சிப்காட் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் நெற்றியில் நாமத்துடன் போராட்டம்!
Published on
Updated on
2 min read

வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க நிலம் எடுப்பதை கண்டித்து தமிழக விவசாய முன்னேற்ற கழகம் மற்றும் சிப்காட் எதிர்ப்பு குழு சார்பாக நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு, நாமம் போட்ட பாதாதைகளை ஏந்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி புதுப்பட்டி, அரூர், மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தமிழக அரசு சிப்காட்டிற்காக நிலம் எடுப்பதற்காக ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டது. அதன் பின்பு இந்த பகுதியினுடைய விவசாயிகள் 25 ஆலோசனைக் கூட்டம் நடத்தியும், 16 கட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தியும், துறை சார்ந்த அமைச்சர் பெருமக்களையும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளையும், நேரில் சந்தித்து வளையபட்டியில் பகுதியில் எக்காரணத்தைக் கொண்டும் சிப்காட் அமைக்க வேண்டாம் என்று கோரியுள்ளனர்.

மேலும், இந்த பகுதி முழுக்க முழுக்க விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால், தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இன்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, தங்கள் நெத்தியில் நாமம் போட்டுக்கொண்டு, நாம் போட்ட பதாதைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வளையப்பட்டி பேருந்து நிலையத்தில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராம்குமார் உள்ளிட்டவர்கள் இதில் விவசாயிகளுடன் திரளாக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய விவசாய முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் உடனடியாக இப்பகுதியுடைய விவசாயிகளின் நலனை கருதி இந்த பகுதியினுடைய சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இந்த பகுதியினுடைய விவசாயிகள் விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடத்துவோம் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த கட்ட போராட்டமாக தமிழக அரசின் உடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, வளையயப்பட்டி சுடுகாடு மயானத்தில் ஒருநாள், விவசாயிகள் அனைவரும் குடியேறும் போராட்டத்தை நடத்த இருப்பதாக கே பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கே பாலசுப்பிரமணியம் கூறுகையில், அரசு சிப்காட் அமைப்பிற்கு வளையப்பட்டி பகுதியில் முயற்சி செய்வதை 16 போராட்டங்கள் நடத்தி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், இதுவரை கைவிடாத தமிழக அரசை கண்டித்து இன்று 17 வது போராட்டமாக நெத்தியில் நாமம் அடித்து, நாம பதாகைகளை ஏந்தி போராடியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சிப்காட் நடவடிக்கைகளையும், அனைத்து மாவட்டங்களிலும் நிறுத்திக் கொள்ள, நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக எச்சரிப்பதாக தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com