அரிக்கொம்பன் யானைக்கு சிலை வைத்த விவசாயி!

அரிக்கொம்பன் யானைக்கு சிலை வைத்த விவசாயி!
Published on
Updated on
1 min read

கேரளா: இடுக்கி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் அரிக்கொம்பன் யானைக்காக எட்டு அடி உயரத்தில் சிலை ஒன்றை அமைத்து தனது நன்றி மற்றும் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்ஞிக்குழி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் அரிக்கொம்பன் பிறந்து வளர்ந்த சின்னக்கனால் என்ற இடத்தில் இஞ்சி விவசாயத்தை செய்து வருகிறார்.

சில காலங்களுக்கு முன்பு அவ்விடத்தில் உலா வந்த அரிக்கொம்பன் யானை பாபு  இஞ்சி விவசாயம் செய்திருந்த நிலத்தில் வழியாக மிதித்து சென்றுள்ளது. இதனால் பயிர்கள் சேதமடைந்தது. முதலில் மனமுடைந்த பாபு கவலை அடைந்தார். இதனையடுத்து மீண்டும் அவ்விடத்தில் இஞ்சி விவசாயத்தை மேற்க்கொண்ட பாபுவிற்க்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டடு அவர் எதிர்பார்க்காத வகையில் நல்ல வருமானமும் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அரிக்கொம்பன் யானையை தங்களின் குலதெய்வமாக அக்குடும்பத்தினர் வழிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரிக்கொம்பன் யானை கேரளாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட நாள் முதல் அக்குடும்பத்தினர் சற்று மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக அவரது குழந்தை அரிக்கொம்பன்  யானை எப்பொழுது வரும் என்று கேட்டு அழ ஆரம்பித்தது. 

இதனிடையே அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டத்திலிருந்து பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் அப்பர் கோதயார் முண்டனத்துறை வனபகுதியில் திறந்து விடப்பட்டது.  இப்பொழுது அரிக்கொம்பன் யானை நலமாக இருப்பதாக செய்திகள் வெளிவருவதால் பாபுவின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். அரிக்கொம்பன் யானை தண்ணீர் குடிப்பதும், புற்களை தண்ணீரில் கழுவி உண்பதும் போன்ற வீடியோக்கள் வெளிவந்த நிலையில் இதனை கண்ட பாபுவின் குழந்தை மகிழ்ச்சி அடைந்தார். மேலும் விவசாயி பாபு தனது வியபார-ஸ்தாபனத்தின் அருகே இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து எட்டு அடி உயரத்தில், சிற்பி ஒருவரின் துணையுடன் அழகான  அரிக்கொம்பன் யானையின் சிலையினை வடிவமைத்துள்ளார்.

இவரின் இத்தகைய செயல் சமுகவலைதளில் வைரலானது. அரிக்கொம்பன் யானையின் மீதுக்கொண்ட நன்றி மற்றும் அன்பின் காரணமாக இந்த சிலையை வடிவமைத்தாகவும் விவசாயி பாபு கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com