பறவைகள் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பறவைகள் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்!
Published on
Updated on
2 min read

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக தொடங்கபட்டுள்ள கிளிகள் பூங்காவினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக தொடங்கபட்டுள்ள கிளிகள் பூங்காவினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டில் 15 லட்சம் பேர் வந்து சென்ற நிலையில் தற்போது அது 30 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால், அன்று முதல் இன்று வரை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை மட்டுமே காண வேண்டி நிலை உள்ளது.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து கூட்ட நெரிசலை குறைக்க மேலும் பல்வேறு சுற்றுலா தலங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. 

இந்நிலையில் உதகை அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக பறவைகள் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஜூரைல் பறவைகள் பூங்காவை போல அமைக்கபட்டுள்ள இந்த பூங்காவில் 8 வகைகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

தென் அமெரிக்கா மற்றும் அமேசான் மற்றும் ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கபட்ட சேன் கென்யூர் வகை கிளி உள்பட பல்வேறு வண்ண கிளிகளும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேண்டஸ் வாத்து, தையோகா வாத்து, பிஞ்சஸ் குருவிகள், கலிபோர்னியா காடைகள், பறக்கும் அணில் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வைக்கபட்டுள்ளன. 

மனிதர்களுடன் சகஜமாக பழுகும் இந்த கிளிகள் பூங்காவிற்குள் செல்லும் சுற்றுலா பயணிகளின் தலை, தோல்கள், கைகளின் மீது அமர்ந்து சேட்டை செய்கின்றன. இந்த பறவைகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலையை பராமரிக்க பூங்காவிற்குள் செயற்கை நீரூற்று, மூங்கில்கள், மரங்கள், புற்கள் போன்றவைகளும் வைக்கபட்டுள்ளன.

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுகள் பூங்காவிற்கு சென்று கிளிகளுடன் செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த பூங்காவை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு தலா 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com