மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். ஆனால் இது வரை அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் என தொடர்ந்து வைரமுத்து மீதான தனது கோபத்தை ட்விட்டரில் கொட்டி வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது இந்தாண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது வழங்குவதற்கு நடிகை பார்வதி தனது ட்விட்டரில் பக்கத்தில், “"ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சினமயி, “திரு. வைரமுத்து, ஓ.என்.வி கலாச்சார அகாடமியால் வழங்கப்படும் ஐந்தாவது ஓ.என்.வி இலக்கிய விருதைப் பெறுகிறார். ஆஹா. மறைந்த திரு ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்.” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.