சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி தர்காவில் 'சந்தனக்கூடு' நாளுக்கான கொடியேற்ற நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்துகொண்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற 'ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி' தர்காவில் இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது. இதையொட்டி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்துகொண்டு நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மாற்று மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.