மும்பையில் சீரியல் ஷுட்டிங்கின் போது, செட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோரேகானில் உள்ள ஃபிலிம் சிட்டியில் 200க்கும் மேற்பட்டோருடன் சீரியல் ஷுட்டிங் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென நிகழ்விடத்தில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாயை அடித்துக்கொன்று மேல்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
தொடர்ந்து சிறுத்தை அடித்து விரட்டப்பட்ட நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார் அனைவரையும் வெளியேற்றினர்.
வனப்பகுதிகள் நிறைந்த கோரேகானில் எச்சரிக்கையையும் மீறி ஷுட்டிங் பணிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.