விஜய் சேதுபதியால் தான் மாமனிதன்...- சீனு ராமசாமி பெருமிதம்:

விஜய் சேதுபதியால் தான் மாமனிதன்...- சீனு ராமசாமி பெருமிதம்:
Published on
Updated on
3 min read

சேலத்தில் பாரதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். விழாவில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு "மாமனிதன்" விருது வழங்கப்பட்டது.

மாமனிதன்:

உலக அளவில் மாபெரும் வெற்றிப் பெற்ற விக்ரம் படத்தைத் தொடர்ந்து, அவ்வளவாக பெரும் விளம்பரம் இல்லாமல் வெளியான படம் தான் மாமனிதன். குடும்பப் பாங்கான சீனு ராமசாமியின் படம் இந்த மமனிதன், அதிகமாக விளம்பரப்படுத்தப் படவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது. திரையரங்குகளில் சுமாரான வசூல் பெற்றாலும், ஆஹா என்ற தனியார் ஓடிடி தளத்தில் வெளியாகி, உலக மக்கள் மத்தியில் பெரிதாக விமர்சண ரீதியில் வெற்றிப் பெற்றது.

தொடரும் சர்ச்சை:

சமீப ஆண்டுகளில் பெரும் சர்ச்சைக்குறிய விஷயமாக இருக்கும் நீட் தேர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த மாமனிதன் படத்தில், சமூக கருத்துகள் நிரைந்துள்ளன. நீட் போன்ற தேர்வுகளைக் கண்டு மாணவ மாணவிகள் பயப்படக்கூடாது என்றும், டாக்டர் இல்லை என்றாலும், மருத்துவத் துறையில் வெவ்வேறு படிப்புகள் உள்ளன என்றும், கருத்துக் கூறும் இந்த படம், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உருவாகியிருந்தது.

மாணவர்களின் விபரீத முடிவு:

சமீபத்தில், பல மாணவர்கள், நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவத் துறை சேர விரும்பும் மாணவர்கள் தளறாமல், வேறு படிப்புகளையும் படிக்கலாம் என அறிவுரைக் கூறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து இயக்குனர் சீனு:

எப்போதும் மக்களுக்கு ஏதாவது ஒரு வாழ்வியல் கருத்துரைக்கும் படங்களை எடுக்கும் சீனு ராமசாமிக்கு உகந்த மதிப்பு கிடைத்ததா என்றால், அது கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த படம் மூலம், அவருக்குக் கிடைத்த அடையாளம் சாலப் பெரிது. ஏன் என்றால், இப்படம், டோக்கியோ நகரில் சிறந்த ஆசியா படம் என்ற விருது பெற்றுள்ளது. மேலும், இவரை அங்கீகரிக்கும் வகையில், சேலத்தில் நடந்த விழாவில், மாமனிதன் விருது பெற்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

இந்நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீனு, மாணவர்கள் தற்கொலை போன்ற மாபெரும் முடிவுகளை எடுக்கக் கூடாது என்று அறிவுருத்தினார்.

“இக்கால இயக்குனர்கள்”:

மேலும் பேசிய அவர், இக்காலத்திய இயக்குனர்களை, தனது சமகால படைப்பாளிகளாக தான் பார்க்கிறேன் என்றும், அவர்கள் மிகவும் பரபரப்பான ஆக்ஷன் படங்கள் மற்றும் நுண்ணுணர்வான படங்களையும் இந்த வயதில் துணிந்து எடுப்பதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு முன்பாக திரையுலகுக்கு வந்தாலும் சமகாலத்தில் பயணிப்பவர்கள் என்று முறையில் அவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணிக்க விரும்புவதாக கூறினார்.

விஜய் சேதுபதியால் தான் மாமனிதன்...

பின், தனது படைப்பின், ஆஸ்தான கதாநாயகனான விஜய் சேதுபதி குறித்து பேசுகையில் நெகிழ்ந்தார். மாமனிதன் ஹீரோ குறித்து பேசுகையில், “நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் திரைக்கதையை கேட்டு விட்டு நடிக்கிறேன் என்று கூறியதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது.” என்று கூறினார்.

அழகான கூட்டணி:

தென்மேற்குப் பருவக்காற்று என்ற படத்தின் மூலம், கோலிவுட்டிற்கு விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த சீனு, தொடர்ந்து, இடம் பொருள் ஏவல், தர்மதுறை படங்கள் கொடுத்தார். தற்போது வெளியாகியுள்ள மாமனிதன் படத்தின் மூலம், அவர்கள் மேலும் பல படங்கள் இணைந்து கொடுக்கவுளதாகத் தெரிகிறது.

மாமனிதன் அடுத்து இடிமுழக்கம்:

ஒவ்வொரு படத்திலும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்ச்சி இருக்கும் படங்களைக் கொடுத்து வரும் சீனுவின் அடுத்த படம், இடிமுழக்கம், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகளை ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com