சும்மா நச்சுன்னு மூன்றே வார்த்தையில் கருத்து சொன்ன பிக்பாஸ் ஆரி!!

மூன்றே வார்த்தையில் படத்தின் கருத்தை சொன்ன பிக்பாஸ் ஆரிக்கு சேரன் நன்றி கூறியுள்ளார்.
சும்மா நச்சுன்னு மூன்றே வார்த்தையில் கருத்து சொன்ன பிக்பாஸ் ஆரி!!
Published on
Updated on
2 min read

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தான் நடிகர் ஆரி. இவர் ஏற்கனவே இரட்டைசுழி, நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரி ஆரம்பத்திலிருந்தே இவர்தான் வெற்றியாளர் என்று பெரும்பாலானோரால் சரியாக கணிக்கப்பட்டு வந்த போட்டியாளர். ஜல்லிக்கட்டு மற்றும் தமிழ் கலாச்சாரம் சார்ந்த போராட்டங்களில் பங்குபெற்ற போராளியாகவும் தமிழ் பற்றாளர் ஆகவும் அறியப்பட்ட ஆரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தபொழுது தமிழ் ரசிகர்களிடையே கொஞ்சம் சலசலப்பு இருந்து வந்தது.

ஆனால், நம்ம ஆரியோ ”என் வழி..தனி வழி..அதுவும் நேர்வழி... என்று ஆரம்பத்திலிருந்தே நன்றாகவும் சிறப்பாகவும் விளையாடி மக்களின் பேராதரவுடன் டைட்டில் பட்டத்தை கைப்பற்றினார். "தவறு செய்யாமல் இருப்பதைவிட.. தவறு செய்வதை தட்டிக் கேட்காமல் இருப்பது தான் பெரிய தவறு.." என்று தனது பெர்பாமன்ஸ் மூலம் காட்டினார். பிக்பாஸ் க்கு பிறகு இவருக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டமே உருவாகியது எனலாம்.

பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியிருக்கும் ஆரியின் படங்களுள் ஒன்றான பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், ரீசன்ட் ஆக ’ஆனந்தம் விளையாடும்’ படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் தனது கருத்தினை கூறியுள்ளார். அதில் கௌதம் கார்த்திக், சேரன் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்து இருப்பதாகவும், "குற்றம் பார்க்கின்.., சுற்றம் இல்லை.." என்ற கருத்தைத்தான் படத்தின் கருத்தாக இருப்பதாகவும் கூறினார். 

இதனையடுத்து ஆரியின் படத்தை பற்றிய கருத்து இணையத்தில் வைரலானது. இதனைப் பார்த்த  ஆரி ரசிகர்கள், படத்தைப் பற்றி சும்மா நச்சென்று மூன்று வார்த்தையில் பட குழுவினரை விட தெளிவாக சொல்லிவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.

மேலும், படத்தை பற்றிய ஆரியின் கருத்துக்கு நடிகரும் இயக்குனரும் ஆன சேரன் அவர்கள் ஆரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com