"சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் பங்கேற்பார்...! " - தயாரிப்பாளர் கே ராஜன். 

"சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் பங்கேற்பார்...! " - தயாரிப்பாளர் கே ராஜன். 
Published on
Updated on
3 min read

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்த  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக தயாரிப்பாளர் கே ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

" விஜய் அவர்கள் நேற்றைய தினம் நடத்திய  பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இருக்கிறார். இது மிக மிக சிறப்பானது மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தியது என்பது மிக சிறப்பான ஒரு விஷயம். ஏனென்றால் எதிர்காலமே மாணவர்கள் கையில் தான் உள்ளது", என்றார்.  

மேலும்,  மாணவர்களிடம் பேசியதில் அரசியல் இருக்கிறதா ?  என்றால் இருக்கிறது. ஓட்டு போட அம்மா அப்பா விடம் பணம் வாங்க வேண்டாம் என சொல்லுங்கள் என மாணவர்களுக்கு கூறியதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. நான் நாளை அரசியலுக்கு வந்தால் என்னிடத்தில் பணம் வாங்க வேண்டாம் என்பதை இதன் மூலமாக சொல்லியிருக்கிறார். இது எதிர்கால அரசியலுக்கான அடித்தளம் தான். தொகுதிக்கு ஒருவர் என்றால் கூட அந்தப் மாணவர்களின் பெற்றோர்களின் பேச்சு அந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பரவும். பாண்டிச்சேரியும் சேர்த்து செய்திருப்பது தொகுதிக்கான அரசியலாக இது மாறி இருக்கிறது", என்று  கூறினார். 

மேலும், மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு;  அதுமட்டுமல்லாது அங்கே மேடையில் அவர் பேசியிருக்கிற பேச்சு எல்லாமே அரசியல் தான் என்றும் கூறினார். " பெரிய தலைவர்களை பற்றி படிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் அண்ணா தொடங்கி கலைஞர் ஜெயலலிதா எம்ஜிஆர் என்று எல்லோரையும் படிக்க வேண்டும் அவர்களிடத்தில் இருக்கிற நல்லதை படிக்க வேண்டும் என்பதை தவிர்த்து இருக்கிறார் ஆனால் இனிமேல் பேசுவார்", என்று விமர்சித்தார். 

இவற்றையெல்லாம் தாண்டி ஒரு 12 மணி நேரம் நின்று கொண்டு மாணவர்களோடு கலந்துரையாடி பரிசு வழங்கி அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு விருந்து வழங்கியிருப்பது அந்த நிர்வாக திறமை வியக்க வைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இது  எதிர்காலம் அரசியலுக்கான அடிதான்..
ஆனாலும் அவர் இன்னும் பக்குவப்படவில்லை. 

" மெர்சல் படத்தில் ஒற்றை வசனம் தான் பேசினார்.  ஜிஎஸ்டியை பற்றி பேசினார் அதற்காக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.  அதுவும் அவர்  ஷூட்டிங் நடைபெறும் போதே நடைபெற்றது. அவ்வாறு வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது தவறு என்று சொல்ல முடியாது;  ஆனால் நடைபெற்ற விதம்தான் தவறு. அதற்கு பின்னதாக ஒரு இடங்களில் கூட அவர் அது போன்ற அரசியலை பேசவே இல்லை அதை தவிர்த்து அவர் தன் ரசிகர்களோடு சேர்ந்து மறுபடியும் அரசியல் பேசியிருந்தால் அது ஒரு நிர்வாகத்துக்கான ஒரு அரசியல் தலைவனுக்கான தளமாக மாறி இருக்கும்", என்று  கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், " விஜய்க்கு போராட்ட குணம் இல்லை ஆனால் இருக்க வேண்டும் அரசியலுக்கு வந்தால் எல்லோருக்கும் போராட்ட குணம் இருக்க வேண்டும். இன்றைக்கு இருக்கிற அரசியலில் யார் எப்போது எப்படி பழி வாங்குவார் என்று தெரியாது, எப்போது ஜெயிலுக்கு அனுப்புவார்கள் என்று தெரியாது அதனால் போராட்ட குணம் இருக்க வேண்டும். போராட்ட குணம் தலைவனுக்கும் இருக்க வேண்டும் ; தொண்டனுக்கும் இருக்க வேண்டும்", என்று பேசினார். 

அதோடு, " யார் வேண்டுமானாலும் அண்ணாவை பெரியாரை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் இவர் எந்த அணுகுமுறையில் அரசியலை அணுக போகிறார் என்பதில்தான் இருக்கிறது இன்னும் அவர் ஒரு மாவட்டத்திற்கு கூட செல்லவில்லை மக்களை சந்திக்கவில்லை. அப்படி இருப்பது அரசியலுக்கு உகந்தது இல்லை. இருக்கிற ரசிகர் கூட்டத்தையும் தொண்டர் கூட்டத்தையும் தக்க வைக்கிற பண்பை கற்றுக் கொள்ள வேண்டும்", என்று விமர்சித்தார். 

இதையடுத்து, " சமூக நீதிபற்றிய கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும்.  தியாக உள்ளம் இருக்க வேண்டும். என்று அறிவுறுத்தியவர், சம்பாதிப்பதும் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் வாங்குவதும் அரசியலுக்கு லாயக்கு இல்லை. அரசியலுக்கு வந்தால் நிறைய நிதி தேவை. பல முனைகளில் இருந்து வருகிற தாக்குதல்களை சமாளிக்கிற பக்குவம் விஜய்க்கு வேண்டும்', என்றும் குறிப்பிட்டார். 

திரைத்துறையிலிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய் வந்திருப்பது நிலைக்குமா ? என்ற செய்தியாளரின் கேள்விக்கு:- 

"எம்ஜிஆர் ஒரு மனிதாபிமானி;  மனிதாபிமானம் மிக்க மனித தெய்வம் அவர் வளர்த்தெடுத்த கட்சியை ஜெயலலிதா கட்டி காப்பாற்றினார்; அவருக்கு பின்னதாக அது போல இல்லை; அதுபோன்ற பண்பு விஜய்க்கு இருக்கிறதா என்றால் இல்லை. என்று கருத்து தெரிவித்தார். அதோடு, " விஜயகாந்த்தும் திரையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் அவர் மனிதாபிமானம் மிக்க மனிதர் ஊரிலிருந்து வருபவர்களை நன்றாக பார்த்துக் கொள்பவர் உணவு கொடுப்பவர். பிரியாணி போட்டவர் ஆனால் இந்த பண்பெல்லாம் இவருக்கு இருக்குமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்", என்றும் கூறினார். 

இதனையடுத்து பேசிய அவர், " விஜயகாந்துக்கு இருக்கிற பக்குவம் விஜய்க்கு இருக்காது", என்றும், எந்த இடத்தில் கோபமாக நடந்து கொள்ள வேண்டும் எந்த இடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று விஜயகாந்துக்கு தெரியும். சட்டசபையில் ஜெயலலிதாவையே எதிர்த்து பேசியவர் ஆனால் அவருக்கு உடல் நலம் இல்லாத போது அவருடைய கட்சி கரைந்து போனது" என்றும்  தேமுதிக ஆட்சி தலைவர் விஜயகாந்த் பற்றி புகழாரம் பேசினார். 

ரஜினியும் போல விஜய்யும் படம் வெளிவரும் போதெல்லாம் இது போன்ற அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இருப்பார் அதுபோல விஜயம் செய்கிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு:-

இப்போது  நிச்சயமாக இப்போது அது இல்லை என்று கூறியவர், வாரிசு படத்தின் ரிலீஸின்போது இதுபோல ஒரு நிகழ்வை செய்தார்;  எல்லா மாவட்ட செயலாளர்களையும் அழைத்து பிரியாணி போட்டார், என்னிடம் கேள்வி எழுப்பினார்கள் இது அரசியலுக்கு வருவதற்காக இதை செய்கிறாரா என்று நான் அதற்கு பதில் சொன்னேன் இந்த நகர்வு அரசியல் நகர்வு இல்லை என்று. ஆனால் தற்போது  எம்பி எலெக்ஷன் இருக்கிறாரோ இல்லையோ எம்எல்ஏ எலக்ஷனில் மிக நிச்சயமாக அவர் நிற்பார்", என்று உறுதியளித்தார். 

தொடர்ந்து, " எப்படி இருந்தாலும் ஒரு தமிழன் இந்தியன் கட்சி ஆரம்பிப்பது அவரவருடைய விருப்பம்
ஆனால் விஜய் மக்களோடு இன்னும் நெருங்கி பழக வேண்டும். மக்களுக்கு இன்னும் நிறைய சேவைகளை செய்ய வேண்டும் மாணவர்களுக்கு செய்தது சிறப்பு மக்களுக்கு இன்னும் ஏழ்மை நிறைந்திருக்கிறது. ஏழ்மைக்கு இன்னும் என்ன செய்யப் போகிறார் ஏழைகளோடு எவ்வாறு பழகப் போகிறார் என்பதில்தான் என்பது கேள்வியாக இருக்கிறது ஆகவே வரட்டும் தமிழகத்தை காக்கட்டும்..", என்று  கருது தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com