கிருஷ்ணகிரி | சூளகிரியை அடுத்த சானமாவு வனப்பகுதியில் இருந்து உணவுக்காக கிராமத்துக்குள் நுழைந்த 20 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விடிந்த பின்பும் வனப்பகுதிக்கு செல்லாமல் கிராமத்துக்குள் இருந்ததால் அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.
20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களான போடூர்பள்ளம், ஆழியாளம், சானமாவு, பிர்ஜேப்பள்ளி, பாத்தக்கோட்டா, ராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஆடு மாடு மேய்க்க வன பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சானமாவு வனப்பகுதியில் 50 கற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ள நிலையில் கிராம மக்களுக்கு வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.