வி.பி.ராமன் வாழ்ந்த பகுதிக்கு "வி.பி.ராமன் சாலை" எனப் பெயர்மாற்றம்!!!

வி.பி.ராமன் வாழ்ந்த பகுதிக்கு "வி.பி.ராமன் சாலை" எனப் பெயர்மாற்றம்!!!
Published on
Updated on
1 min read

சென்னையில் வி.பி.ராமன் வாழ்ந்த பகுதிக்கு "வி.பி.ராமன் சாலை" என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி தீர்மானம் செய்துள்ளது.

வி.பி.ராமன் தி.மு.க வின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராகவும், 1957-60ம் ஆண்டுகளில் திமுகவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கும் ஆற்றியவர்.  வழக்கறிஞரான இவர், 1977 முதல் 1979 வரை தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். 

இந்நிலையில் இவர் வாழ்ந்த பகுதியில் பெயர் மாற்றம் செய்ய அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதியினை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com