கிருஷ்ணகிரி : வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பள்ளியில் அட்டகாசம் செய்வதாக கிருஷ்ணகிரி வனசரகர் மகேந்திரன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மகேந்திரன் வனசரகர் தலைமையில் வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட குரங்குகளை வனவர் அண்ணாதுரை, வனகாப்பாளர் அசோகன் மற்றும் பழனிசாமி ஆகியோர் இணைந்து கூண்டுகள் அமைத்து குரங்ககளை பிடித்தனர்.
மேலும் படிக்க | குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்!
பல மாதங்களாக பள்ளியில் மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் அட்டகாசம் செய்து கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து வேப்பனப்பள்ளி காப்புக்காட்டில் பாதுகாப்புடன் விட்டனர்.
நீண்ட நாட்களாக பள்ளியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த குரங்குகளை பிடித்ததால் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் நிம்மதி அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க | யானை தந்தம் பதுக்கிய இருவர் கைது...