வடமாடு ஜல்லிக்கட்டு .... கண்டுகளித்த மக்கள்..!!

வடமாடு ஜல்லிக்கட்டு .... கண்டுகளித்த மக்கள்..!!
Published on
Updated on
1 min read

ஆலங்குடி அருகே உள்ள  திருவரங்குளம் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்றும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.

இதில், சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஜல்லிக்கட்டு காளைகள் 12 குழுவாக பங்கேற்றது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைக்கு  ஒன்பது வீரர்கள் வீதம் போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்க பணம் 5001, மற்றும் சிறப்பு பரிசுகள் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பணம் 5001, மற்றும் சிறப்பு பரிசுகள் பரிசாக வழங்கப்பட்டது. 

திருவரங்குளம் பிடாரி அம்மன் கோவில் திடலில் நடைபெற்ற இந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com