பாறை மீது நின்று தண்ணீர் குடித்த யானையை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்...

மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தாக்கில் உள்ள பாறை மீது நீர் அருந்தி உணவு சாப்பிட்ட ஒற்றை ஆண் காட்டு யானையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
பாறை மீது நின்று தண்ணீர் குடித்த யானையை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்...
Published on
Updated on
1 min read

நீலகிரி | உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலை உள்ளது. இந்த கல்லட்டி மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை 14வது கொண்டை ஊசி வளைவு அருகே 70 டிகிரி பள்ளத்தாக்கில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வரத்து குறைந்து காணப்படும் நிலையில் 70 அடி பள்ளத்தாக்கில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பாறைகள் மீது 12 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது.

பின், பாறை நடுவே வரும் நீரை அருந்தி அப்பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சாப்பிட்டு 70 அடி பள்ளத்தாக்கில் பாறைகள் மீது நடந்து சென்ற காட்சியை கல்லட்டிமலை பாதை வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மிகவும் கவனமாக பாறைகள் மீது நடந்து சென்ற யானையை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com