நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி எம் எஸ் வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ துறை நிர்வாக ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப கூறி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு பதிவு உயர்வு வழங்கிட ஆணையை வழங்கிட வேண்டும் எனவும் மருத்துவத் துறையில் காலியாக உள்ள 40% க்கும் அதிகமான அனைத்து நிலை நிர்வாக ஊழியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
கோரிக்கைகள்:
பலமுறை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் மனு கொடுத்தும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்நாடு மருத்துவ துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்பிராஜன்.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காவிட்டால் அனைத்து அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் நம்பிராஜன்.