நீர்த்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு ...

மேல்நிலை நீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு நடத்தி வருகின்றனர்
நீர்த்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு ...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே உள்ள இறையூர் வேங்கைவயல்  கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது என தமிழக அரசால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அப்படி நியமிக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர்களான ராஜேந்திரன், சுவாமிநாதன், தேவதாஸ், சாந்தி ரவீந்திரநாத் என நான்கு பேர் கொண்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தற்போது இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அந்த பகுதி பொதுமக்களுடன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைவேலு மற்றும் ஆதிதிராவிட நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விசாரணையில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் யார் யாரெல்லாம் காரணம் ஏன் இன்னும் சம்பந்தபட்ட நபரை கைது செய்யப்படவில்லை இந்த பிரச்சனைக்கு பிறகு எந்த விதத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் எப்படி செய்யப்பட்டு வருகிறார்கள் என்று பல்வேறு கட்ட விசாரணை இந்த பகுதியில் உள்ள பட்டியலின மக்களிடம் நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com