சீர்காழி அருகே நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடு!

சீர்காழி அருகே நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடு!
Published on
Updated on
1 min read

சீர்காழி சையது யாசின் மவுலானா தர்கா கந்தூரி விழாவில் அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மிகத்தை பரப்பியவர். இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964 ம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார்.அங்கு அவருக்கு தர்க்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் யாசின் மெளலானா இறையடி சேர்ந்த தினமான கந்தூரி விழா நடைபெறவது வழக்கம்.

அதன்படி இன்று நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மவுலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மவுலான சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும்  வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

https://youtu.be/wHMtOkdRPY0

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com