பழனி தைப்பூசம்.... குவியும் பக்தர்கள்....

பழனி தைப்பூசம்.... குவியும் பக்தர்கள்....
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் குவிந்துள்ளனர். 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.  இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாலை அணிந்து, விரதம் இருந்து பழநி வந்த பக்தர்கள் அலகு குத்தியும் ,காவடிகள் எடுத்து ஆடியும் , கோலாட்டம் ஆடியும் வருகின்றனர். மேலும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து தங்களது தோளில் சுமந்து கிரிவல பாதையில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com