கோடைக்காலம் நெருங்குவதால் வெப்பத்தின் காரணமாக அடிக்கடி தீவிபத்து நடைபெறுவது வழக்கம். அதிலும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியின் பொது மருத்துவமனையில் ஏற்கனவே கடந்த ஆண்டு மட்டும் இரண்டு முறை தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சையது முகமது ஷா ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கார்த்திக் தலைமையில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று மருத்துவமனையில் மின் கசிவினால் ஏற்படும் தீவிபத்து மற்றும் எரிவாயு சிலிண்டர் மூலமாக ஏற்படும் திடீர் தீவிபத்தினால் நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளது மற்றவர்களை எப்படி காப்பாற்றுவது என நேரடி செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆகியோர் மத்தியில் செய்து காட்டினர்.