65 கிடா வெட்டி 10,000 ஆண்கள் கலந்து கொண்ட அசைவ திருவிழா...

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
65 கிடா வெட்டி 10,000 ஆண்கள் கலந்து கொண்ட அசைவ திருவிழா...
Published on
Updated on
1 min read

மதுரை | திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமம். இங்கு காலதெய்வம் கருப்பையா முத்தையாகோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள்.

இந்த கோவிலுக்கு சுற்றுப் புறங்களில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிற கிடாய்களை நேர்ச்சை செலுத்துவார்கள். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் முதன்மை கிடாய் வெட்டப்பட்டது.

இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் கறிகளை சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர். கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் இதில் கலந்துகொண்டனர்.

கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்பு தான் பெண்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டும். இந்த விநோத திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com