மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கவும், பாறைகளை உடைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், பொக்லைன் எந்திரம் பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
தடையை மீறி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தும் உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் எச்சரித்து உள்ளார்.
விவசாய பணிகளுக்கு மினி பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பயன்படுத்த வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.
இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் கோத்தகிரியில் இருந்து கூக்கல் துறை செல்லும் சாலையில் M. கைகாட்டி பகுதியில் சொகுசு பங்களா கட்டுவதற்காக தேயிலைச் செடிகளை அகற்றி மினி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.