கொடிவேரி அணையில் நீர் திறப்பு!

கொடிவேரி அணையில் நீர் திறப்பு!
Published on
Updated on
1 min read

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளிää அரக்கன்கோட்டை பாசன வாய்கால்கள் மூலம் கோபி அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தநிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கொடிவேரி அணையிலிருந்து  தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும்ääஅரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 100 அடி கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இரண்டாம் போக பசானத்திற்கான தண்ணீரை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர்.

மேலும் இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வணங்கினார்.

இந்த இரண்டாம் போக  பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com