சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டண ஏலம் ரூபாய் 57 லட்சத்திற்கு ஏலம் போனது. மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றாலா பயணிகளிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு சீசன்களை கொண்ட சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் சபரிமலை சீசன் காலமாகவும், ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசன் ஆகவும் கருதப்படுகிறது. மேலும் வார விடுமுறை நாட்கள் பண்டிகை காலங்கள் தொடர் விடுமுறை நாட்கள் என வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு ஒரு வருடத்திற்கான பார்க்கிங் கட்டண ஏலம் இன்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி சிறப்பு அலுவலர்.ஜீவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டண தொகையான ரூபாய் இருபது லட்சத்திலிருந்து ஏலம் தொடங்கியது. இறுதியாக பார்க்கிங் கட்டண ஏலம் ரூபாய் 57 லட்சத்திற்கு ஏலம் போனது இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றாலா பயணிகளிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் ஏலம் பிடித்த நபர்களிடம் அறிவுறுத்தினர்.
இதையும் படிக்க: ஏமாற்றிய சிட் ஃபண்ட் நிறுவனம்... பணத்தை மீட்க கோரிக்கை!!