அனுமதியற்ற விடுமுறை..... 4 பேர் பணியிடை நீக்கம்!!!

அனுமதியற்ற விடுமுறை.....  4 பேர் பணியிடை நீக்கம்!!!
Published on
Updated on
1 min read

அரசு மிகவும் பிற்படுத்தபட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியை சேர்ந்த வார்டன், சமையலர்கள் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திடீர் விடுமுறை:

அரியலூர் நகரில் அரசு மிகவும் பிற்படுத்தபட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி இயங்கி வருகிறது.  இதில் 65 மாணவர்கள் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் 8, 9, 10 ஆகிய தேதிகளில் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு விடுதி மூடப்பட்டுள்ளதாக அரியலூர் கோட்டாச்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதிகாரிகள் சோதனை:

இதனையடுத்து அரியலூர் கோட்டாச்சியர் ராமகிருஷ்ணன் அந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி வார்டன், சமையலர்கள், காவலர் உள்ளிட்ட 4 பேரும் பணியில் இல்லை என்பது உறுதியானது. இ

பணியிடை நீக்கம்:

தனையடுத்து விடுதி வார்டன் பிரபு, சமையலர்கள் கோபாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், விடுதி காவலர் அண்ணாதுரை உள்ளிட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோட்டாச்சியர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்த உத்தரவு நகல் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com