தஞ்சாவூரில் இளசு முதல் பெருசு வரை !!!!!! பாரம்பரியத்தை மீட்டெடுக்க புடவையில் நடைபயணம்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தஞ்சையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் புடவையில் ஓர் நடை பயணம்
தஞ்சாவூரில் இளசு முதல் பெருசு வரை !!!!!!  பாரம்பரியத்தை மீட்டெடுக்க புடவையில் நடைபயணம்
Published on
Updated on
1 min read

பொன் விழா

இன்னர் வீல் சங்கத்தின் பொன் விழாவை கொண்டாடும் வகையில் பெண்களுக்கான பாரம்பரிய புடவையில் நடைபயணம் போட்டி நடைபெற்றது. 18 வயது முதல் 35 வரை ஒரு பிரிவினரும், 36 முதல் 59 வயது வரை ஒரு பிரிவினரும், 60 வயதிற்க்குட்பட்டோர் ஒரு பிரிவினரும் என மூன்று பிரிவின் கீழ் இந்த போட்டி நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இருந்து போட்டி தொடங்கியது.

முன்னதாக போட்டியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியாசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடைகளான புடவையை அணிந்து கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக நடை பயணம் மேற்கொண்டனர்.

பரிசுகளும் சான்றுகளும்

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கு பரிசுகளும் - சான்றுகளும் வழங்கப்பட்டன. பெண்களின் ஆரோக்கியத்தையும் - தமிழர்களின் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கும் வகையில் இந்த போட்டி நடைபெறுவதாக தெரிவித்தனர். தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த போட்டியில் நடைபெறுவதாகவும், வருங்காலங்களில் இந்திய அளவில் போட்டி நடைபெற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com