திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆவணித்திருவிழா...!

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில்   கொடியேற்றத்துடன் துவங்கிய ஆவணித்திருவிழா...!
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான  ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1-30க்கு விஷ்வரூப தீபாராதனையுன், 2-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 8-ம் தேதி 5 ம் திருநாளான   குடவருவாயல் தீபாராதனையும், 10-ம்  தேதி 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 11-ம் தேதி 8-ம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாள் 13ம் தேதி நடக்கிறது. இத்திருவிழா அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன்,கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com