மாசி பௌர்ணமிக்காக கூட்டம் கூட்டமாக சாமி தரிசணம் செய்த பக்தர்கள்...

சுந்தரமகாலிங்கம் கோவில் மாசி மாத பௌர்ணமியே முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலில் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மாசி பௌர்ணமிக்காக கூட்டம் கூட்டமாக சாமி தரிசணம் செய்த பக்தர்கள்...
Published on
Updated on
1 min read

விருதுநகர் |  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,பௌர்ணமி,அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை சார்பாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையடி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடையும் விதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் உள்ள வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர்.வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் நீரோட பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கும் வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடித்த உடனே தாணிப்பாறை அடிவார பகுதிக்கு இறங்கி வந்து விட வேண்டும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com