வடகிழக்கு பருவமழைக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்டம்...

தற்போது தொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டம் தயாராகி வருகிறது. மேலும், மேயர் சுந்தரி ராஜா, சோதனைகளை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழைக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்டம்...
Published on
Updated on
2 min read

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜேசிபி இயந்திரங்கள், பேட்டரிகள், மரம் அறுக்கும் இயந்திரம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சோதனை செய்தார்.

வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை ஆகிய கடலோர மாவட்டங்கள் அடிக்கடி மழையினால் பாதிக்கப்படக்கூடும்.

தமிழக அரசு வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் அடிக்கடி இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட கூடிய சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

நகராட்சியாக இருந்த கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 45 வார்டுகளை உள்ளடக்க கடலூர் மாநகராட்சியில் பருவமழை எதிர்கொள்ள போதிய உபகரணங்கள் உள்ளதா என்பது குறித்தும், ஜெனரேட்டர்கள், ஜேசிபி வாகனங்கள், விளக்குகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சோதனை செய்தார்.

அப்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் நாவேந்திரன், மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com