" ஆட்டோ நூலகம் " ? இது என்ன புதுசா இருக்கு...!

" ஆட்டோ நூலகம் " ?  இது என்ன புதுசா இருக்கு...!
Published on
Updated on
1 min read

கோவையில் முதல்முறையாக " லைப்ரரி ஆன் வீல்ஸ் " என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.

செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்புத்திறன் என்பது குறைந்து வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும் காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில், நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோ, பயணிக்களுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள்,சானிடைசர் மற்றும் சாக்லெட் பெட்டியுடன் வடிவமைக்கபட்டுள்ளது. இதனை துவக்கி வைத்து பேசிய பாலகிருஷ்ணனன் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகரம் முழுவதும் 2000 ஆட்டோக்களில் இது போன்று ஆட்டோ நூலகம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com