தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த 2 பேர் பலியான விவகாரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்ற முதியவர், மற்றும் விவேக் ஆகிய இரண்டு பேர் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் அவர்fள் உயிரிழந்தது தெரிய வந்தது.
இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் தஞ்சை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பார் உரிமையாளர் பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி...!