புதுச்சேரியில், லாரி ஓட்டுநரை நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை தியாகமுதலியார் நகரைச்சேர்ந்தவர் ராஜி (32). இவர் நேற்று மாலை தேங்காய் திட்டுப்பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வாணவெடி வெடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் நாங்களும் வாணவெடி வெடிக்கின்றோம் எனக்கூறி தகராரில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர்களுக்கும் ராஜிக்கும் தகராறு ஏற்பட்டது. இது முதலியார் பேட்டை காவல் நிலையம் வரை சென்று அங்கு இரு தரப்பினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதனைத்தொடர்ந்து தியாக முதலியார் நகரில் உள்ள தனது வீட்டிற்கு ராஜ் சென்று கொண்டிருந்தார் அப்போது அவரை பிந்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் ராஜ் வீட்டின் அருகேயே அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டு வேசப்படத்தில், சம்பவ இடைத்திலேயே ராஜ் பலியானார். இது குறித்து தகவலறிந்த முதலியார் பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் நேற்று மாலை துக்க வீட்டில் நடந்த தகராரில் ஈடுபட்ட வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்த ஹரி ஆகிய இருவரும் ராஜியை நாட்டு வெடிகுண்டு வீசு கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த முதலியார் பேட்டை போலீசார் தப்பிச்சென்ற இருவரையும் தேடிவருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.