மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிஹ்வண்டி பகுதியை சேர்ந்தவர் இஃப்ரான் ஷேக். இவரது மனைவி குரேஷா ஷேக். அவ்வப்போது தம்பதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில், கணவன் இஃப்ரானை அவரது மனைவி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இப்படியே சண்டை தொடர்ந்ததால் தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதனால் தான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் இஃப்ரான் நினைத்துள்ளார். யாரோ ஒருவர் தன் மனைவி மீது பேயை ஏவி விட்டதால் தான் அவர் தன்னை தாக்குவதாக இஃப்ரான் மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில், இஃப்ரான் மதுபோதையில் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி குரேஷா கணவரிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே தனது மனைவி உடலில் உள்ள பேய் தான் தன்னுடன் சண்டையிடுவதாகவும், அந்த பேயால் தான் மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் எண்ணிய இஃப்ரான் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்தை கத்தியை கொண்டு குரேஷாவை குத்தினார்.
இதில் குரேஷா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த குரேஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால், மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து இஃப்ரான் தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு கொலை செய்துவிட்டு தப்பியோடிய இஃப்ரானை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி குரேஷா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், பேய் என நினைத்து மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.